×

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்

வாஷிங்டன்: ஹமாஸ் அமைப்புடன் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த பைடன், இஸ்ரேல், கத்தார், எகிப்பது உள்ளிட்ட நாடுகளுடன் தன்னுடைய குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக போர்நிறுத்தம் என்ற முடிவுக்கு இஸ்ரேல் தற்போது வந்துள்ளதாக தெரிவித்தார்.

போர் நிறுத்தத்துடன் பிணை கைதிகளை விடுவிக்கும் வகையிலான செயல் திட்டத்தை இஸ்ரேல் வகுத்துள்ளதாக தெரிவித்த அதிபர் பைடன், இது குறித்து ஹமாஸ் அமைப்புக்கு கத்தார் அரசு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். முதலில் 6 வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை அமல்படுத்தவும் பின்னர் காசா போன்ற பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகளை திரும்பப் பெறவும், பிணைக் கைதிகளை விடுவிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் வேண்டும் என கூறிவரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் இந்த போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும் எனவும் ஜோ பைடன் கேட்டுக்கொண்டார்.

The post இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Israel ,Hamas ,US President ,Joe Biden ,Washington ,Biden ,White House ,Qatar ,Egypt ,
× RELATED இஸ்ரேல் – ஹமாஸ் போர்: போர்நிறுத்த...