×

செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

செங்கல்பட்டு, ஜூன் 1: செங்கல்பட்டு மலை அருகே பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என 50 ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கர்நாடக மாநில நந்திதுர்கம் பகுதியில் உருவாகும் பாலாறு அம்மாநிலத்தில் 93 கிமீயும், ஆந்திராவில் 33 கிமீயும், தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியாக அதிகப்படியாக 222 கிமீ என மொத்தம் 348 கிமீ தூரம் தடம் பதித்த பாலாறு செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே வாயலூர் பகுதியில் கடலில் கலக்கிறது.செங்கல்பட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் ஆர்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் நடத்தியும், அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

50 ஆண்டுகால கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை திருக்கழுகுன்றம் அருகே வள்ளிபுரம், கல்பாக்கம் அருகே வாயலூர் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே தடுப்பணை உள்ளது. செங்கல்பட்டு பகுதியில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு எங்கும் தடுப்பணை அமைக்கப்படவில்லை. எனவே, செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை கட்டினால் சுற்றியுள்ள திம்மாவரம், ஆத்தூர், தேவனூர், பாலூர், காவூர், கரும்பாக்கம், வில்லியம்பாக்கம், தேவனூர், சாத்தணஞ்சேரி, மெய்யூர், பினாயூர், மாமண்டூர் என 50 கிராம விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால், பாலாற்றில் தடுப்பணை கட்டினால், விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மூன்று போகமும் விவசாயம் நடைபெறும். அதேபோல், ஏக்கருக்கு 30 முதல் 35 மூட்டைகள் வரை நெல் அறுவடை செய்யலாம், என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வெள்ளம் பாலாறு வழியாக சென்று வீணாக கடலில் கலக்கிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு பாலாறு வரண்டு காணப்படுகிறது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளின் 50 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணைகள் அமைக்க செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

n கர்நாடக மாநில நந்திதுர்கம் பகுதியில் உருவாகும் பாலாறு அம்மாநிலத்தில் 93 கிமீயும், ஆந்திராவில் 33 கிமீயும், தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியாக அதிகப்படியாக 222 கிமீ என மொத்தம் 348 கிமீ தூரம் தடம் பதித்த பாலாறு செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் பகுதியில் கடலில் கலக்கிறது.

n செங்கல்பட்டு பகுதியில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு எங்கும் தடுப்பணை அமைக்கப்படவில்லை. எனவே, செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை கட்டினால் சுற்றியுள்ள திம்மாவரம், ஆத்தூர், தேவனூர், பாலூர், காவூர், கரும்பாக்கம், வில்லியம்பாக்கம், தேவனூர், சாத்தணஞ்சேரி, மெய்யூர், பினாயூர், மாமண்டூர் என 50 கிராம விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

n பாலாற்றில் தடுப்பணை கட்டினால், விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மூன்று போகமும் விவசாயம் நடைபெறும்.

The post செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Pala ,Chengalpattu ,Chengalpattu Hill ,Nandidurgam, Karnataka State… ,Chengalpattu Dam ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு பகுதியில் சாலையில்...