×

கோடைமழை காரணமாக திருக்குறுங்குடியில் விவசாய பணிகள் மும்முரம்

களக்காடு,ஜூன் 1: திருக்குறுங்குடியில் பெய்த கோடை மழையால் விவசாயிகள் விளை நிலங்களை உழுது சமன்படுத்தும் வேலைகளை ஆர்வமுடன் விவசாயிகள் துவங்கி உள்ளனர். களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் மே மாத இரண்டாவது வாரத்திலிருந்து தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக கோடை மழை பெய்தது. இதையடுத்து 2 மாதத்திற்கு மேலாக வறண்டு காணப்பட்ட பெரிய குளத்தில் பாதி குளத்திற்கும் மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. நம்பியாற்று கால்வாயிலிருந்து தொடர்ந்து குளத்துக்கு தண்ணீர் வரத்து உள்ளது.

இதையடுத்து பெரிய குளத்துப் பாசன விவசாயிகள் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான மாவடி, மலையடிப் புதூர், டோனாவூர், செட்டிமேடு உள்ளிட்ட பல்வேறு விவசாய கிராமங்களில் கோடை மழையால் விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வயல் வெளிகளில் டிராக்டர் மூலம் உழவு செய்து தொழி அடிக்கும் வேலைகளை துவங்கி உள்ளனர். இன்னும் சில நாட்களில் வாழை கன்றுகள் போடும் பணிகள் நடைபெறும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் கேரளாவில் மழை பெய்து வருவதால் தென்மேற்கு பருவமழை இப்பகுதியில் விரைவில் பெய்யக்கூடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கோடைமழை காரணமாக திருக்குறுங்குடியில் விவசாய பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Thirukurungudi ,Kalakadu ,Tirukurungudi ,
× RELATED தனியார் நிறுவனத்தில் பிளாஸ்டிக் பைப்புகள் திருட்டு