×

குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை

தர்மபுரி, ஜூன் 1:காரிமங்கலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வெங்கடாஜலம் (37). இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். வெங்கடாஜலம் அடிக்கடி மது அருந்தி வீட்டுக்கு வந்ததால் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதே போல், நேற்று முன்தினமும், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை தட்டிக்கேட்க வந்த தனது தாயை, வெங்கடாஜலம் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து, தனது அறையில் சென்ற வெங்கடாஜலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவலறிந்து வந்த காரிமங்கலம் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Venkatajalam ,Karimangalam Ambedkar ,Nagalakshmi ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் எலுமிச்சை விலை கிலோ ரூ.145 ஆக உயர்வு