×

கழிவுநீர் தொட்டியில் விழுந்த மூதாட்டி மீட்பு

 

தேவகோட்டை, ஜூன் 1: தேவகோட்டை அருகே ஆறாவயல் கிராமத்தை சேர்ந்த சேகர் மனைவி பூமயில் (65). இவர் நேற்று தனது வீட்டு தோட்டத்தில் 15 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் தவித்தார்.

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தேவகோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூமயிலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் காயமடைந்த அவரை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post கழிவுநீர் தொட்டியில் விழுந்த மூதாட்டி மீட்பு appeared first on Dinakaran.

Tags : Devakottai ,Shekhar ,Bhumail ,Aravayal ,Dinakaran ,
× RELATED தேவகோட்டையில் கால்வாயில் விழுந்த காளை மீட்பு