×

நாய்கள் கருத்தடை மையத்தில் ஆய்வு

திண்டுக்கல் ஜூன் 1: திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் சிறைச்சாலை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் நாய்கள் கருத்தடை மையம் அமைக்கப்படுகிறது. இங்கு நேற்று பிராணிகள் நல வாரிய இணை இயக்குநர் டாக்டர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமையில், மாவட்ட கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் விஜயகுமார், டாக்டர் சரவணகுமார், சுகாதார அலுவலர் செபாஸ்டின் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். விரைவில் கருத்தடை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதற்கு தேவையான உபகரணங்கள், மருந்துகள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

The post நாய்கள் கருத்தடை மையத்தில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Center for Contraception for Dogs ,Dindigul ,Dr ,Suresh Christopher ,Animal Welfare Board ,District Veterinary Care Assistance ,Canine Sterilization Center ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய்...