×

பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே இளம்பெண் மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மட்டாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்(30). இவர் சென்னையில் உள்ள ஒரு பேக்கரியில் ஸ்வீட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மேகலா(25). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தம்பதிகளுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் விடுமுறைக்கு சதீஷ், சென்னையில் இருந்து தனது வீட்டிற்கு இன்று மாலை வந்துள்ளார். அப்போது அவரது மனைவி மேகலா மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பர்கூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மேகலாவின் உறவினர்கள் மருத்துவமனையின் முன்பு குவிந்தனர். தகவல் அறிந்த பர்கூர் போலீசார் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது மேகலாவின் உறவினர்கள், போலீசாருடன், மேகலாவை, சதீஷ் அடித்து கொன்றுவிட்டதாகவும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், பிரேத பரிசோதனைக்கு பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உத்தரவாதம் அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Burghur ,Krishnagiri ,Barkur, Krishnagiri district ,Satish ,Matarappalli village ,Bharkur ,Krishnagiri district ,Chennai ,
× RELATED உழவர் சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு