×

மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இரு பெண்கள் கைது

 

தேனி, மே 31: தேனி, பழனிசெட்டிபட்டி போலீஸ் எஸ்.ஐ பாலசுப்ரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை தேனி அருகே பூதிபுரம் செல்லும் வழியில் உள்ள ஆதிபட்டி கண்மாய்க்கரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக மஞ்சுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சந்திரன் மனைவி செல்வராணி (55), பொம்மயகவுண்டன்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த ராஜா மனைவி ரதி (48) ஆகியோர் 260 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இவ்விரு பெண்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இரு பெண்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Theni ,Palanisetipatty Police S. ,I Balasubramanian ,Atibhuti Kanmaykar ,Budipuram ,Dinakaran ,
× RELATED டிடிவி மீது கிரிமினல் வழக்கு; தேனி கோர்ட்டில் மனு