×

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மெடிக்கல்களில் சிசிடிவி கேமிராக்கள் கட்டாயம்: கலெக்டர் அறிவுறுத்தல்

 

ராமநாதபுரம். மே 31: ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மெடிக்கல்களில் சிசிடிவி கேமிராக்கள் பொறுத்துவது அவசியம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் விதிகள் 1945ல் அட்டவணைகள் குறிப்பிட்டுள்ள மருந்துகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்தகங்களிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்படும் இன்றைய நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் அல்லது மருந்து ஆய்வாளர் ஆய்வின் போது கண்டறியப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர் மீது மேற்கண்ட இந்த உத்தரவினை பின்பற்றாத காரணத்திற்காக உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மெடிக்கல்களில் சிசிடிவி கேமிராக்கள் கட்டாயம்: கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram district ,Ramanathapuram ,Vishnu Chandran ,
× RELATED கடற்கரை கிராமங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை