×

விழுப்புரம் கேண்டீன் ஊழியர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

 

விழுப்புரம், மே 31: போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்பட்ட விழுப்புரம் டாஸ்மாக் கேண்டீன் ஊழியர் உடலை மறுபிரேத பரிசோதனை முடிந்தும் ஒப்படைக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த உத்தரவின்பேரில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் பழனி முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விழுப்புரம் ஜிஆர்பி தெருவை சேர்ந்தவர் ராஜா. டாஸ்மாக் கேண்டீன் ஊழியராக பணியாற்றி வந்த இவரை, தாலுகா காவல் நிலைய போலீசார் கடந்த ஏப்ரல் 10ம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

வீட்டிற்கு வந்த அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனிடையே போலீசார் தாக்கியதில் தனது கணவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுபடி ராஜாவின் உடல் தோண்டி எடுத்து மறு உடற்கூறாய்வு நடத்தப்பட்டு அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டது. அவர உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்தது.

இதனைதொடர்ந்து ராஜாவின் உடலை திருப்பித் தர உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனைவி அஞ்சு வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ராஜாவின் உடலை உடனடியாக ஒப்படைக்கவும், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நல்லடக்கம் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டது. அதன்படி நேற்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ராஜாவின் உடலை மாவட்ட ஆட்சியர் பழனி முன்னிலையில் உறவினர்களிடம் ஒடைத்தனர்.

இதனை தொடர்ந்து கேகேரோட்டில் உள்ள இடுகாட்டில் ஆட்சியர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில் அதன்முடிவுகள் குறித்த அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. அந்த அறிக்கையில் கூறப்படும் தகவலின் அடிப்படையில் அடுத்கட்ட நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது.

The post விழுப்புரம் கேண்டீன் ஊழியர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Villupuram Tasmac Canteen ,Collector ,Palani ,
× RELATED விழுப்புரம் வட்டாச்சியர் சுந்தரராஜன்...