×

பஸ் ஸ்டாப்பில் இடையூறாக நிறுத்திய டூவீலர்கள் அகற்றம்

திருமங்கலம், மே 31: திருமங்கலம் யூனியன் அலுவலக பஸ் ஸ்டாப்பில் நிறுத்தப்படும் டூவீலர்களால் டூவிலர் பார்க்கிங்காக மாறி வரும் பஸ் ஸ்டாப் என நேற்று தினகரனில் வெளியான செய்தியின் எதிரொலி காரணமாக போலீசார் எடுத்த துரித நடவடிக்கையாக பஸ் ஸ்டாப்பில் நிறுத்தப்பட்ட டூவீலர்களை அகற்றப்பட்டன. திருமங்கலம் யூனியன் அலுவலகம் முன்புள்ள பஸ் ஸ்டாண்டில் அதிகளவில் டூவீலர்கள் நிறுத்தப்பட்டு வந்தன.

டூவீலர் ஸ்டாண்டாக மாறியதால் பஸ்களுக்கு காத்திருக்கும் பயணிகள் நிற்ககூட இடமின்றி கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து தினகரன் நாளிதழில் நேற்று டூவீலர் பார்க்கிங்காக மாறி வரும் பஸ் ஸ்டாப் என செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து நேற்று திருமங்கலம் போக்குவரத்து போலீசார் துரித நடவடிக்கை எடுத்தனர். அதன்படி திருமங்கலம் யூனியன் அலுவலகம் எதிரே நிறுத்தப்பட்ட டூவீலர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என எச்சரிக்கை கொடுத்து வாகனங்களை அகற்றினர்.

பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நின்று பஸ்களில் ஏறி செல்ல வசதியாக பேரிகார்டுகளை அமைத்து கொடுத்தனர். இதன் காரணமாக நேற்று திருமங்கலம் யூனியன் பஸ் ஸ்டாப் பளிச்சென மாறி பயணிகளுக்கு மகிழ்ச்சியை தந்தது. இதேபோல் தினசரி தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழ்க்கும் துரித நடவடிக்கை எடுத்து போக்குவரத்து போலீசாருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post பஸ் ஸ்டாப்பில் இடையூறாக நிறுத்திய டூவீலர்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Thirumangala ,Thirumangalam Union Office Bus Stop ,Duvilar ,Union office ,
× RELATED பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய விவகாரம்:...