×

மழையின்போது மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம்

திண்டுக்கல், மே 31: மழையின்போது மின் கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: கோடைமழை காரணமாக மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர்ந்து தென்மேற்கு பருவ மழை தொடங்க உள்ளது. வீடுகளின் அருகாமையில் மின்கம்பிகள் ஏதும் அறுந்து விழுந்திருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக தமிழ்நாடு மின் உற்பத்தி(ம) பகிர்மானக் கழக அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தேவையில்லாமல் மின்கம்பங்களின் அருகே செல்வதையும், மின் கம்பங்களில் கால்நடைகளைக் கட்டி வைப்பதையும், துணிகள் உலர்த்துவதையும் தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கச் செல்வதையும், கால்நடைகளை குளிப்பாட்டுவதையும் முழுமையாக தவிர்க்க வேண்டும். மழைக்காலங்களில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் தனியாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது பாதுகாப்பான வழிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post மழையின்போது மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Electricity Board ,Power Board ,Dinakaran ,
× RELATED புதிதாக மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு...