×

பெற்றோர் கோரிக்கை கொள்ளிடம் அருகே துளசேந்திரபுரத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை நாகப்பட்டினத்தில் சாலையோர சூப் கடைகளில் கலப்படமா?

 

நாகப்பட்டினம்,மே31: நாகப்பட்டினம் நீலாகீழவீதி முன்பு ஆட்டிறைச்சி சூப் நடத்திவரும் சாலையோர வியாபார கடையில் ஆட்டிறைச்சி சூப் என்ற பெயரில் மாட்டுக்கறி சூப் வழங்கப்படுவதாக உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் புகார் வந்தது. இதையடுத்து அவரது உத்தரிவின்படி நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அந்த கடை உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற்றிருந்ததும், அங்கு மாட்டிறைச்சி சூப்போ அல்லது இதர பாகங்களோ விற்பனை செய்யப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.

அதேநேரம் அவரவர்கள் உணவு பழக்க வழக்கங்கள் பொறுத்து ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி உள்ளிட்ட உணவு பாதுகாப்புத்துறை உணவுக்கு அனுமதித்துள்ள எந்தவொரு இறைச்சியையும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் மற்றும் பதிவுச் சான்றுடன் சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய தடை இல்லை. ஆட்டிறைச்சி என்ற பெயரில் இதரவகை இறைச்சிகளை உபயோகிப்பாளர்களை மற்றும் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையில் விற்பனை செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

The post பெற்றோர் கோரிக்கை கொள்ளிடம் அருகே துளசேந்திரபுரத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை நாகப்பட்டினத்தில் சாலையோர சூப் கடைகளில் கலப்படமா? appeared first on Dinakaran.

Tags : Tulsendrapuram ,Kollidam ,Nagapattinam ,Food Security District ,Officer ,Pushparaj ,Neelakeelaveedi ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் அருகே திரௌபதி அம்மன் கோயில்...