×

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறக்கும் தேதியை ஒத்திவைக்க வேண்டும்

 

கொள்ளிடம்,மே 31: தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வு மற்றும் பொது தேர்வுகள் நடைபெற்று அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின்பு வரும் 6ம் தேதி மீண்டும் திறப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் வரலாறு காணாத அளவுக்கு வாட்டி வதைத்து வந்ததால் குழந்தைகள் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் சிரமமடைந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவலாக மிதமான மற்றும் கனமழை பெய்தது. இதனால் அதிக வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வந்தது.

ஆனால் வங்க கடலில் உருவாகிய புயல் கரையை கடந்த உடன் மீண்டும் கடலோர பகுதிகள் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் பரவலாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாகி வறண்ட வானிலை நிலவரம் இருந்து வருகிறது. கடந்த 5 தினங்களாக வெப்பம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் வரும் 6ம் தேதி பள்ளி திறக்கப்படும் நிலையில் பள்ளி மாணவர்கள் அதிக சிரமத்தை சந்திக்க நேரிடும். எனவே வெயில் அதிகம் சுட்டெரிக்கும் தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளி திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று பெற்றோர் சார்பாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு இயக்க மாவட்ட தலைவர் நாராயணசாமி தெரிவித்தார்.

 

The post வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறக்கும் தேதியை ஒத்திவைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Department of Education ,Dinakaran ,
× RELATED பள்ளிகள் திறக்கும் முதல்நாளே...