×

வானூர் முன்னாள் எம்எல்ஏ மறைவு முதல்வர் இரங்கல்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: வானூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.கழகச் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பரமசிவம் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையுற்றேன். பரமசிவம் பல்வேறு பொறுப்புகளில் இருந்து கழகப் பணியையும் மக்கள் பணியையும் திறம்பட ஆற்றிய செயல்வீரர். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

The post வானூர் முன்னாள் எம்எல்ஏ மறைவு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Vanur MLA ,Chief Minister ,Chennai ,M.K.Stalin ,Vanur Assembly Constituency ,Kazhagam Paramasivam ,Paramasivam ,Vanur ,MLA ,
× RELATED இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல...