×

புதியதாக 150 மாணவர்கள் சேர்க்கை

 

அரூர், மே 31: சித்தேரி உண்டுஉறைவிட பள்ளியில் நடைபெற்ற சேர்க்கை முகாமில் 150 பேர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அரூர் அடுத்த சித்தேரி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை சிறப்பு முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற முகாமில் 6 முதல் 12ம் வகுப்பு வரை 87 மாணவர்கள், 63 மாணவியர் என மொத்தம் 150 பேர் புதியதாக சேர்க்கப்பட்டனர்.

இம்முகாமில் பழங்குடியினர் நல உதவி இயக்குநர்(ஓய்வு) வைரமணி, மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கண்ணன், சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் காளீஸ்வரன், சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள் சண்முகம், எஸ்எம்சி தலைவர் அன்னப்பன், பிடிஏ தலைவர் வடிவேல், பள்ளி தலைமை ஆசிரியர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் பேரேரி, சித்தேரி, சூர்யகடை, தேக்கல்பட்டி, நொச்சிக்குட்டை, மண்ணூர், மாங்கடை, கலசப்பாடி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர்.

 

The post புதியதாக 150 மாணவர்கள் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : ARUR ,CHITTERI UNDUURAIVITA SCHOOL ,CHITTERI GOVERNMENT ,WELFARE OVERNIGHT MODEL SECONDARY SCHOOL ENROLLMENT SPECIAL CAMP SCHOOL CAMPUS ,Dinakaran ,
× RELATED அரூரில் குண்டுமல்லி விலை குறைந்தது