×

கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகள் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி தகவல்

மும்பை: ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில், பொருளாதார வளர்ச்சி, வங்கி டெபாசிட்கள், மோசடி விவரங்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த 2023-24 நிதியாண்டில் 36,075 வங்கி மோசடிகள் நிகழ்ந்துள்ளன. இது முந்தைய நிதியாண்டில் 13,564 ஆக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் வங்கி மோசடி எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது. மதிப்பு அடிப்படையில், ரூ.13,930 கோடிக்கு மோசடி நடந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக நிகழ்ந்த வங்கி மோசடி விவரங்களைப் பார்க்கும்போது, தனியார் வங்கிகள் தான் அதிக மோசடிகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளன. ஆனால், பண மதிப்பு அடிப்படையில் பொதுத்துறை வங்கிகளில்தான் அதிக மோசடிகள் நடந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகவே அதிக மோசடிகள் அரங்கேறியிருக்கின்றன.

வங்களில் உரிமை கோரப்படாத டெபாசிட்கள் கடந்த நிதியாண்டில் 26 சதவீதம் அதிகரித்து ரூ.78,213 கோடியாக உள்ளது. 10 ஆண்டுக்கு மேல் உரிமை கோரப்படாத தொகை, வங்கி வாடிக்கையாளர் விழிப்புணர்வு நிதியில் சேர்க்கப்படும். கடந்த மார்ச் மாத இறுதியின்படி, இந்த நிதியில் ரூ.62,225 கோடி இருப்பு உள்ளது. நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகள் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி தகவல் appeared first on Dinakaran.

Tags : RBI ,Mumbai ,Dinakaran ,
× RELATED குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி...