×

லாகூர் ஒப்பந்தத்தை மீறியதாக நவாஸ் ஷெரீப் ஒப்புதல்

புதுடெல்லி: பாகிஸ்தான் மாஜி பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது கட்சி கூட்டத்தில் பேசும்போது, கடந்த 1990 ம் ஆண்டில் நானும் அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயும் லாகூரில் ஒப்பந்தம் செய்து கொண்டோம். அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான திருப்புமுனையை ஏற்படுத்தும் விதமாக ஒப்பந்தம் அமைந்தது.

இருப்பினும் சில மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் உள்ள கார்கிலில் பாகிஸ்தான் ஊடுருவலால் கார்கில் போர் உருவானது. இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறி விட்டது என்று குறிப்பிட்டார். அப்போது பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப்பின் மேற்கொண்ட சில நடவடிக்கைகளால் தான் போர் ஏற்படுவதற்கு காரணம் என அவர் மறைமுகமாக குறிப்பிட்டார்.

The post லாகூர் ஒப்பந்தத்தை மீறியதாக நவாஸ் ஷெரீப் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Nawaz Sharif ,Lahore ,New Delhi ,Indian ,Prime Minister Vajpayee ,Pakistan ,Dinakaran ,
× RELATED அரசியல் பிரச்னைக்கு தீர்வு காணும்...