×

புதிய 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கோரும் தமிழ்நாடு அரசு: 2025-26 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை தொடங்க மருத்துவ கல்வித்துறை திட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் புதிய 6 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான அனுமதியினை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் அனுமதி கோர உள்ளது. என்.எம்.சி என்று சொல்லக்கூடிய தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதியினை வழங்குவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான நடைமுறை விரையில் தொடங்க இருப்பதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.

இத்தகைய 6 மருத்துவ கல்லூரிகள் மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியினை தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக அரசு கோர உள்ளது. அதே போல், 2025-26ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழ்நாடு அரசும், மருத்துவ கல்வி இயக்குநரகமும் திட்டமிட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள்படி மருத்துவ கல்லூரிகளுக்கான விதிகள் தற்போது வரை முடிக்கப்பட்டிருப்பதாகவும், கல்லூரிகளுக்கான 25 ஏக்கர் இடம், 21 துறைகள் இருக்க வேண்டும். 10 லட்சம் மக்கள் தொகை இருக்கக்கூடிய பகுதியில் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது போன்ற புதிய விதிகளின்படி 6 மருத்துவ கல்லூரிகளுக்கான தயார் நிலை எட்டப்பட்டிருப்பதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளில் பல நிபந்தனைகளும் மாற்றப்பட்டிருப்பதனால் விண்ணப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் இதற்கான விண்ணப்பம் தேசிய மருத்துவ ஆணையத்திடம் வழங்க இருப்பதாகவும் மருத்துவ கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post புதிய 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கோரும் தமிழ்நாடு அரசு: 2025-26 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை தொடங்க மருத்துவ கல்வித்துறை திட்டம் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu ,N. M. ,National Medical Commission ,C ,Department of ,Education ,Dinakaran ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...