×

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 தொகுதிகளுக்கான பார்வையாளர்களை நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 தொகுதிகளுக்கான பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. 39 தொகுதிகளுக்கு 57 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை உட்பட 16 தொகுதிகளுக்கு தலா 2 பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் 3 பேர் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

The post தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 தொகுதிகளுக்கான பார்வையாளர்களை நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Tags : Election Commission of India ,Tamil Nadu ,Delhi ,Tensenna ,North Chennai ,Central Chennai ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்...