×

குமரி எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதம்

நெல்லை, மே 30: இணைப்பு ரயில் வருகை தாமதம் காரணமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக நெல்லைக்கு வந்து புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். கன்னியாகுமரியில் இருந்து தினமும் சென்னைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தினமும் மாலை 5.50 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு இரவு 7 மணிக்கு வந்து சேரும். அதன்பின்னர் இங்கிருந்து புறப்பட்டு சென்னை செல்லும்.

திருவனந்தபுரத்தில் இருந்து வரக்கூடிய இணை ரயில் காலதாமதம் ஏற்பட்ட காரணத்தால் நேற்று கன்னியாகுமரியில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் 7.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு இரவு 9.33 மணிக்கு வந்தது. அதன்பிறகு இரவு 9.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு சென்னை சென்றது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 2வது நாளாக நேற்றும் 2 மணி நேரம் தாமதமாக சென்னைக்கு சென்றது. இதனால் நெல்லை உள்ளிட்ட வழித்தட ரயில்நிலையங்களில் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

The post குமரி எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதம் appeared first on Dinakaran.

Tags : Kumari Express ,Nellai ,Kanyakumari Express ,Kanyakumari ,Chennai ,Dinakaran ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்