×

நெல்லை அருகே வாட்டர் டேங்க் ஆபரேட்டருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

நெல்லை, மே 30: திசையன்விளை அருகே பஞ்சாயத்து வாட்டர் டேங்க் ஆபரேட்டருக்கு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். திசையன்விளை அருகேயுள்ள முதுமுத்தான்மொழி, வடக்கு தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (28). இவர் முதுமுத்தான்மொழி பஞ்சாயத்து வாட்டர் டேங்க் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி தலைவன்விளையில் உள்ள முதுமுத்தான்மொழி பஞ்சாயத்து சொந்தமான குடிநீர் குழாய் பைப்பை தலைவன்விளை, மேலத் தெருவை சேர்ந்த கண்ணன் (45) அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினார். அப்போது அங்கு வந்த அரிகிருஷ்ணன் இதனை தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், அரிகிருஷ்ணனிடம் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிந்து கண்ணனை கைது செய்தனர்.

The post நெல்லை அருகே வாட்டர் டேங்க் ஆபரேட்டருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Vekyanvilai ,Arikrishnan ,North Street, Muthumuthanmozhi ,Muthumuthanmozhi ,Dinakaran ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்