×

குண்டர் சட்டத்தில் கொள்ளையன் கைது

நெய்வேலி, மே 30:நெய்வேலி நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட வடக்குத்து ஊராட்சி என்ஜேவி நகரில் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி செல்வராஜ் மகன் வெற்றிச்செல்வன் என்பவர் வீட்டில் நள்ளிரவில் பூட்டை உடைத்து சுமார் 60 பவுன் நகைகளை திருடிய வழக்கில் புவனகிரியை அடுத்த எல்லைக்குடியை சேர்ந்த ராமர் மகன் ராஜசேகர்(33) என்பவரை நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சுதாகர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து சுமார் 30 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதன்பேரில் ராஜசேகரை குண்டர் காவல் தடுப்பு சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post குண்டர் சட்டத்தில் கொள்ளையன் கைது appeared first on Dinakaran.

Tags : Neyveli ,Selvaraj ,Vethichelvan ,Vetrichelvan ,NJV Nagar ,Dinakaran ,
× RELATED பூசாரியை தாக்கிய 3 பேர் கைது