காட்டுமன்னார்கோவில், மே 30:காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமராட்சியை அடுத்த கீழவன்னியூர், பழையரோடு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் மனைவி அஞ்சம்மாள்(40). கடந்த 9 வருடங்களுக்கு முன் கதிர்வேல் இறந்ததையடுத்து மகன், மகளுடன் அஞ்சம்மாள் வசித்து வந்தார். கடந்த 21ம் தேதி இரவு வீட்டில் அஞ்சம்மாள் தூங்கிக்கொண்டிருக்கும்போது நள்ளிரவில் வீட்டில் பாத்திரம் விழும் சத்தம் கேட்டு எழுந்து சென்றபோது, மர்ம நபர் வீட்டின் பின்பக்க வழியாக தப்பித்து ஓடினார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 செல்போன்கள் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து குமராட்சி காவல்நிலையத்தில் அஞ்சம்மாள் புகார் அளித்தார். சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ரூபன்குமார் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா, தலைமை காவலர்கள் விஜயகுமார் மற்றும். ரஜினி ஆகியோர் சைபர் க்ரைம் உதவியுடன் சம்பந்தப்பட்ட செல்போன் சிக்னலை வைத்து நவீன தொழில்நுட்பத்துடன் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட காட்டுமன்னார்கோவில் அடுத்த வடக்கு கொளக்குடி, ரஹமத் நகரை சேர்ந்த முஹமது அன்சாரி மகன் தாஜிதீன்(31) என்பவரை காட்டுமன்னார்கோவில்-குமராட்சி புறவழி சாலையில் வைத்து பிடித்து கைது செய்தனர். இதை தொடர்ந்து தாஜிதீனிடம் இருந்த செல்போன்கள், ரொக்க பணம் ரூ10 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post வீடு புகுந்து பணம் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.