×

கீழ்வேளூர் ஒன்றியம் கோவில்பத்து

 

கீழ்வேளூர், மே 30: நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கோவில்பத்து கண்ணாம்பாள் மாரியம்மன் கோயிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
நாகை மாவட்டம் கீழ்வேளூரையடுத்த கொடியாலத்தூர் ஊராட்சி கோவில்பத்தில் கண்ணாம்பாள் மாரியம்மன் ,கழனியப்ப ஐயனார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகாசி பெருவிழா கடந்த மே 26ம் தேதி அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை மற்றும் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.விழாவின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான திருவிளக்கு பூஜை நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு பூஜை செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர். கிராமவாசிகள் செய்திருந்தனர்.

The post கீழ்வேளூர் ஒன்றியம் கோவில்பத்து appeared first on Dinakaran.

Tags : KILVELUR UNION KOILPATH ,Kilivelur ,Thiruvilakku Puja ,Vaikasi festival ,Kovilpattu Kannampal Mariyamman Temple ,Nagai District ,Union ,Kannampal Mariyamman ,Kalaniappa Iyanar Temple ,Kodiyalathur Panchayat Kovilpattu ,Kilvellur ,Kilvellur Union Kovilpattu ,
× RELATED இலுப்பூர் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா