×

தக்கலை பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் கேரள அரசு பேருந்துகள்

தக்கலை, மே 30 : நாகர்கோவிலில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு தமிழக, கேரள அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் பாஸ்ட் பாசஞ்சர் என்ற அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் குமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை ஆகியவை முக்கிய நிறுத்தங்கள் ஆகும். இவை பஸ் நிலையங்கள் அமைந்திருக்கும் நகரங்களாகும். இதில் கேரள பஸ்கள் அவ்வப் போது தக்கலை பஸ் நிலயத்தினுள் நுழையாமல் பயணிகளை பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியில் சாலையில் இறக்கி விட்டு செல்வதுண்டு. ஆனால் சமீப காலமாக இத்தகைய செயல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இத்தனைக்கும் தக்கலை பஸ் நிலையம் என்பது மெயின் ரோட்டிலேயே அமைந்துள்ளது. ஒரு சுற்று சுற்றினால் பயணிகளும் பாதுகாப்பாக இறங்குவதுடன், பிற பயணிகளும் ஏறிச்ெசல்ல வாய்ப்பு உண்டு.

ஆனால் கடந்த சில நாட்களாக திருவனந்தபுரத்தில் இருந்து வரும் கேரள அரசு பஸ்கள் பஸ் நிலையத்திற்கு உள்ேள செல்லாமல் வெளிப்பகுதியில் சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகின்றனர். இதனால் பயணிகள் பதுகாப்பாகவும், தங்களது உடைமைகளை இறக்க முடியாமலும் அவதியடைகின்றனர். சில நேரங்களில் பயணிகளுக்கும், நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியில் செயற்கையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இது தொடர்பாக சர்வதேச உரிமைகள் கழக மாவட்ட துணை தலைவர் தர்வேஷ் மீரான் கூறுகையில், கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் இத்தகைய செயல் பாகுபாடு காட்டுவது போன்று உள்ளது. குறிப்பிட்ட இடத்திற்கு டிக்கெட் பெற்றவரின் உரிமையை பறிக்கிறது.

நெய்யாற்றின் கரை பஸ் நிலையத்தின் உள்ளே சென்று அங்குள்ள பிளாட்பாரத்தில் பயணிகளை இறக்கி, ஏற்றி வரும் கேரள பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள தக்கலை பஸ் நிலையத்தினை புறக்கணிப்பதன் காரணம் தெரியவில்லை. கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் இச்செயலால் பயணிகள் பாதிக்கப்படுவதுடன், போக்குவரத்து நெரிசல், விபத்து அபாயம் உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது. எனவே கேரள அரசு போக்குவரத்து கழகம் அனைத்து பஸ்களும் தக்கலை பஸ் நிலையத்தின் உள்ளே ெசல்ல அறிவுறுத்த வேண்டும். இதனை மீறி சாலையில் பயணிகளை இறக்கி விட்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீசார் முன் வரவேண்டும் என கூறினார்.

The post தக்கலை பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் கேரள அரசு பேருந்துகள் appeared first on Dinakaran.

Tags : Kerala Government ,Thakkalai ,Tamil Nadu ,Nagercoil ,Thiruvananthapuram ,Kerala ,Kumari district ,Marthandam ,Kaliakavilai ,Thakkalai bus station ,
× RELATED பெரியாறில் புதிய அணை கட்ட திட்டம் கேரள...