×

திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

நாகர்கோவில், மே 30: நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கு நடந்து கொள்வது எப்படி என பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது நடந்து கொள்வது பற்றி திமுக குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் சற்குரு கண்ணன், சுரேந்திரகுமார், பி.எஸ்.சந்திரா, லிவிங்ஸ்டன், மதியழகன், பாபு, பிராங்கிளின், சுந்தர் சிங், குளச்சல் நகர ெசயலாளர் நாகூர்கான், மாநகர பகுதி செயலாளர்கள் ஜவகர், ஜீவா, துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Nagercoil ,DMK union ,Dinakaran ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்