×

பணியாளர் வருகையை உறுதி செய்ய 100 நாள் வேலைத் திட்டத்தில் பயோ – மெட்ரிக் முறை அமல்

 

மன்னார்குடி, மே 30: 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாளர்களின் வருகையை உறுதி செய்வ தற்கு பயோ – மெட்ரிக் முறை அமல்படுத்தி உள்ளதற்கு பசுமை சூழல் பாது காப்பு இயக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பசுமை சூழல் பாதுகாப்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிரா மப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், விவசாயம், நீரா தாரங் களை மேம்படுத்தவும் பல்வேறு அரசியல் இயக்கங்கள், கிராமப்புற செயற் பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2005 ம் ஆண்டு முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறையின் மூலம் செயல் படுத்தப்பட்டுவரும் இந்த திட்டத்தில் ஆண்-பெண் இருபாலருக்கும் சம ஊதியம் வழங்கப் படுகி றது. இத்திட்டத்தில் பணியாளர்களின் வருகையை உறுதி செய்ய நிழற்படம் முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறை காரணமாக வருகை பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வெளிவந்த நிலையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாளர்களின் வருகையை உறுதி செய்ய பயோ – மெட்ரிக் முறையை அமல்படுத்த வேண்டும் என பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில், 100 நாள் வேலைத் திட்டமானது தமிழ்நாட்டில் நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு பணியாளர்களின் வருகை பதிவை உறுதி செய்யும் வகையில் பணித்தளத்தில் பயோ மெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்யப்படுகிறது. இதன்முலம், இந்த திட்டத்தில் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு உண்மை யான பயனாளிகள் பயன்பெறுவது உறுதி செய்யப்படும். எனவே, பயோ – மெட்ரிக் முறை அமல்படுத்தி உள்ளதை பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் வரவேற்கிறது. இவ்வாறு பசுமை சூழல் பாதுகாப்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜா தெரிவித்துள்ளார்.

 

The post பணியாளர் வருகையை உறுதி செய்ய 100 நாள் வேலைத் திட்டத்தில் பயோ – மெட்ரிக் முறை அமல் appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Green Environment Protection Movement ,Dinakaran ,
× RELATED நாட்டு வெடி குடோனில் தீ ஒருவர் பலி