×

குன்றத்து கோயிலில் ரூ.14 லட்சத்தில் மெட்டல் டிடெக்டர் அமைப்பு

திருப்பரங்குன்றம், மே 30: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.14 லட்சம் செலவில் நவீன மெட்டல் டிடெக்டர் கருவி அமைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் மதுரை மற்றும் வெளியூர்களில் இருந்து சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இங்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோயிலின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக பக்தர்கள் கொண்டு வரும் கை பை உள்ளிட்ட உடைமைகளை சோதனை செய்ய நவீன கம்ப்யூட்டருடன் கூடிய மெட்டல் டிடெக்டர் கருவி ரூ.14 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இந்த கருவியை திருப்பரங்குன்றம் சரக காவல் உதவி ஆணையர் குருசாமி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர்கள் சத்தியசீலன், சுமதி, இளவரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post குன்றத்து கோயிலில் ரூ.14 லட்சத்தில் மெட்டல் டிடெக்டர் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Kunrattu Temple ,Thiruparangundaram ,Subramaniya Swami ,Temple ,Tiruparangundaram ,Thiruparangundaram Subramaniya Swami Temple ,Sami ,Madurai ,Pashtoor ,
× RELATED திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கடல் உள்வாங்கியது!!