×

சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவரை நேரில் அழைத்து பாராட்டிய காவல் ஆணையாளர்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.37,500/-பணத்தை புனித தோமையர் மலை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவரை நேரில் அழைத்து அவரது நேர்மையை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

சென்னை, நந்தம்பாக்கம், 2வது தெரு, ஏழுகிணறு, எண்.5/10, என்ற முகவரியில் சங்கரன், வ/69, த/பெ.செல்லமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 26.05.2024 காலை, புனிததோமையர் மலை, OTA, ருத்ரா ரோட்டில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, அங்கு சாலையில் கிடந்த கவரை எடுத்து பார்த்த போது, அதில் ரூ.37,500/- இருந்துள்ளது. உடனே முதியவர் சங்கரன் மேற்படி ரூ.37,500/- பணத்தை S-1 புனித தோமையர் மலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேற்படி பணத்தின் உரிமையாளரை கண்டுபிடிப்பதற்காக, காவல் நிலைய காவல் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், மேற்படி சம்பவத்தில் சாலையில் கண்டெடுத்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவர் சங்கரன் என்பவரை இன்று (29.05.2024) நேரில் அழைத்து அவரது நேர்மையை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

The post சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவரை நேரில் அழைத்து பாராட்டிய காவல் ஆணையாளர் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai Metropolitan Police ,Commissioner ,St. Thomaiyar Hill Police Station ,Nandambakkam ,2nd Street ,Yehukinaru ,of ,Dinakaran ,
× RELATED சென்னை பெருநகர காவல் மோப்பநாய்...