×

உடன்குடி அருகே ஐம்பொன் சிலை மீட்பு

உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே சீர்காட்சியை சேர்ந்தவர் வின்சென்ட் (60). இவர், வீட்டையொட்டி மரக்கன்று நட குழி தோண்டினார். ஒன்றரை அடி ஆழத்தில் கல் தட்டுப்பட்டது போல் இருந்தது. உடனே கடப்பாரையை வைத்து தோண்டியபோது 10 கிலோ எடை கொண்ட ஐம்பொன் நடராஜர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிலையின் கை, கால்கள் அறுத்தெடுக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசுக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிலை 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது.

The post உடன்குடி அருகே ஐம்பொன் சிலை மீட்பு appeared first on Dinakaran.

Tags : Udonkudi ,Onankudi ,Vincent ,Udonkudi, Tuthukudi district ,Dinakaran ,
× RELATED ஆழ்வார்திருநகரியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்