×

நகை கடை நடத்தி ரூ.100 கோடி மோசடி: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது

சென்னை: ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சேலம் வலசையூரைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் சபரி சங்கர் கைது செய்யப்பட்டார். தருமபுரி, அரூரில் செயல்பட்டு வந்த எஸ்.வி.எஸ். ஜூவல்லரி கடைகளுக்கு சீல் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ‘பொங்கும் தங்கம்’ என்ற பெயரில் பழைய நகைகளுக்கு புதிய நகைகள் தருவதாகக் கூறி ஏராளமானோரிடம் மோசடி செய்துள்ளார். பணம், நகையை இழந்தவர்கள் அடுத்தடுத்து அளித்த புகார்களை தொடர்ந்து புதுச்சேரியில் பதுங்கியிருந்த சபரி சங்கரை போலீஸ் கைது செய்தது.

 

The post நகை கடை நடத்தி ரூ.100 கோடி மோசடி: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Absconding ,Chennai ,Sabari Shankar ,Salem Valasayur ,SVS ,Dharmapuri, Aroor ,Dinakaran ,
× RELATED போலி ஆவணம் சமர்ப்பித்து நர்சிங்...