×

மாநகர் முழுவதும் 100 % மழைநீரை சேமிக்கும் வகையில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வலியுறுத்தல்

 

கோவை, மே 29: கோவை மாநகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகரில் கடந்த 3 மாதங்களாக கடும் வெயில் சுட்டெரித்த காரணத்தால், பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே, மாநகராட்சி முழுவதும் உள்ள அனைத்து வீடு மற்றும் இதர கட்டிடங்களில் கட்டாய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

தற்போது வரை மாநகராட்சி முழுவதும் முறையான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆகவே, அனைத்து கட்டிடங்களிலும் 100 சதவீதம் மழைநீரை சேமிக்கும் வகையில், கட்டாயம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்க வேண்டும். இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம், மக்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதை செய்தால் மட்டுமே வரும்காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து மாநகர மக்களை காப்பாற்ற முடியும். இந்த விஷயத்தில், கோவை மாநகராட்சி முன்னுதாரணமாக விளங்க, தாங்கள் உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டுகிறோம்.  இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

The post மாநகர் முழுவதும் 100 % மழைநீரை சேமிக்கும் வகையில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,26th Ward Councillor ,Chitra Velliangiri ,Municipal ,Corporation ,Commissioner ,Sivaguru Prabhakaran ,Dinakaran ,
× RELATED 1.5 கிராம் உயர்ரக போதை பொருள் பறிமுதல்