×

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

 

ஈரோடு, மே 29: ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாப்பு இருப்பறையில் வைக்கப்பட்டு, சீல் இடப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்புடன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 14 மேசைகள் வீதம் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 84 மேசைகளில் 17 முதல் 22 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் பணிக்கு 84 கண்காணிப்பாளர்கள், 84 உதவியாளர்கள், 84 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் 2 நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று ஆய்வு மேற்கொண்டார். குடிநீர் வசதி, மின்சாரம், கழிப்பிடம், வாகனம் நிறுத்துமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தபால் வாக்கு எண்ணும் அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகுநாதன், செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) கார்த்திகேயன் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Erode ,Rajagopal Sunkara ,Erode Parliamentary Constituency Vote Counting Centre ,Erode Parliamentary Constituency Erode Government ,Dinakaran ,
× RELATED 10ம் தேதி முதல் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெறும்