×

போலீசிடமிருந்து மகனை மீட்டு தர கோரி கலெக்டரிடம் தாய் மனு

 

தேனி, மே 29: பெரியகுளத்தில் போலீசார் அழைத்துச் சென்ற தனது மகனை மீட்டுத் தரக்கோரி கலெக்டரிடம் தாய் கோரிக்கை மனு அளித்தார். தேனி மாவட்டம், பெரியகுளம் நகர் வடகரை வெற்றிலைமட தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி சித்ராதேவி. இவர் நேற்று முன் தினம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகன்கள் சூர்யபிரகாஷ்(23), அருண்குமார்(22).

இந்நிலையில் கடந்த 7ம் தேதி அருண்குமாரை சிலர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டனர். இளையமகன் இறந்த சோகம் மாறாத நிலையில், மூத்த மகன் சூர்யபிரகாஷ் மற்றும் அவரது மனைவி சுஜித்ரா, அவர்களது 9 மாத குழந்தையுடன் வசித்து வந்தபோது, சூர்யபிரகாஷை பெரியகுளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று, துன்புறுத்தி வருகின்றனர். எனவே, போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள எனது மகனை மீட்டுத் தரவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

The post போலீசிடமிருந்து மகனை மீட்டு தர கோரி கலெக்டரிடம் தாய் மனு appeared first on Dinakaran.

Tags : Theni ,Periyakulam ,Arumugam ,Chithradevi ,Vadakarai Vetralimada Street, Periyakulam Nagar, Theni District ,Dinakaran ,
× RELATED பெரியகுளத்தில் இளம்பெண்ணை கூட்டு...