×

குழித்துறை பாரதீய முன்னாள் படை வீரர் நலச்சங்க ஆண்டு விழா

 

மார்த்தாண்டம், மே 29: குழித்துறை பாரதீய முன்னாள் படைவீரர் நல சங்கத்தின் 15 வது ஆண்டு விழா நடந்தது. தலைவர் ஏசுராஜன் தலைமை வகித்தார். செயலாளர் வக்கீல் எலிசா வரவேற்று ஓராண்டு நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். துணை செயலாளர் ரபேல், பொருளாளர் சுஜாதா, மகளிர் அணி தலைவி ரோஸ்மேரி, சட்ட ஆலோசகர் வக்கீல் அருள், ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் சி.கே.நாயர், திருநெல்வேலி சட்டக்கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் டாக்டர் எபனேசர் ஜோசப், அருமனை ஆவின் ஸ்கூல் முதல்வர் ஜெயா ரவி தாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இரண்டாம் உலகப் போரில் பங்கு பெற்ற 101 வயது முன்னாள் படை வீரர் வேதக்கண்ணுக்கு இரண்டாம் உலகப் போரின் நாயகன் விருதும், 80 வயது கடந்த மூத்த உறுப்பினர்களுக்கு சீனியர் வெட்றன் விருது, தாய்மார்களுக்கு வீர மங்கை விருது, தன்னார்வலர் மற்றும் சங்க நிர்வாகிகளுக்கு வெட்ன்ஸ் புரமோட்டர் விருதும் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் முப்படைகளை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். முன்னாள் ராணுவ அதிகாரி அலெக்ஸ்சாண்டர் நன்றி கூறினார்.

The post குழித்துறை பாரதீய முன்னாள் படை வீரர் நலச்சங்க ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Kulitura Bharatiya Ex- ,Serviceman ,Welfare Association ,Marthandam ,Bharatiya Ex-Servicemen's Welfare Association ,Kulitthura ,President ,Esurajan ,Advocate Eliza ,Deputy Secretary ,Raphael ,Kulittura Bharatiya Ex-Servicemen's Welfare Association ,Dinakaran ,
× RELATED முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க ஆலோசனை கூட்டம்