×

கேரளாவில் நாயின் நகம் பட்டு பெண் டாக்டர் சாவு

 

திருவனந்தபுரம், மே 29: பாலக்காடு மாவட்டம் மண்ணார்க்காடு அருகே குமரம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் உஸ்மான். அவரது மனைவி ரம்லத் (42). ஹோமியோபதி டாக்டர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் வளர்த்த நாயின் நகத்தால் ரம்லத்தின் உடலில் லேசான காயம் ஏற்பட்டது.

சிறிய காயம் தானே என்று கருதி எந்தவிதமான சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை. சில நாட்களுக்கு பிறகு நாய் செத்தது. இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ரம்லத்துக்கும், அவரது கணவர் உஸ்மானுக்கும் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 2 பேரும் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

2 பேரும் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்தனர். ஆனால் நேற்று 2 பேரும் டாக்டரிடம் சொல்லாமல் வீட்டுக்கு சென்று விட்டனர். அதன் பிறகு ரம்லத்தின் உடல்நிலை மோசமானது. நேற்று வீட்டில் வைத்தே அவர் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து அறிந்ததும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நாயின் நகம் பட்டது தான் மரணத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது.

The post கேரளாவில் நாயின் நகம் பட்டு பெண் டாக்டர் சாவு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Usman ,Kumaramputhur ,Mannarkadu ,Palakkad district ,Ramlat ,Dr. ,Ramlam ,
× RELATED நீட் தேர்வுக்கு எதிராக கேரளாவில் போராட்டம்..!!