×

குண்டர் சட்டத்தில் முதியவர் கைது

 

கள்ளக்குறிச்சி, மே 29: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பெருமாள் நாயக்கர் தெருவை சேர்ந்த தியாகராஜன் மகன் ரமேஷ்(54) என்பவர் 14 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தொடர்பாக திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ரமேஷின் செய்கை பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாலும், பிணையில் விடப்பட்டு வெளியே வந்தால் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், அவரின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், ரமேஷை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட எஸ்பி சமய்சிங் மீனா பரிந்துரை செய்தார்.

இதையடுத்து ரமேஷை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். அதன்படி திருக்கோவிலூர் மகளிர் காவல்துறையினர், ரமேஷை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட எஸ்பி எச்சரித்துள்ளார்.

The post குண்டர் சட்டத்தில் முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Ramesh ,Thiagarajan ,Thirukovilur Perumal Nayakar Street, Kallakurichi district ,Thirukovilur ,
× RELATED கள்ளக்குறிச்சி அருகே போலி மருத்துவர் கைது