×

பைக் மீது கார் மோதி வாலிபர் பலி

 

வானூர், மே 29: புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிளியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கிளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் வினோத்குமார் (34). இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் தனது வீட்டிலிருந்து மோட்டார் பைக்கில் தேர்க்குணம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது புதுச்சேரி-திண்டிவனம் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்த கார் வினோத்குமார் சென்ற பைக் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்குமார் உடலை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வினோத்குமாருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவியும் மித்ரா என்ற மகளும் உள்ளனர்.

The post பைக் மீது கார் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Vanur ,Puducherry-Tindivanam road ,Klianur police ,Villupuram district ,Vanur taluk Klianur ,
× RELATED வானூர் முன்னாள் எம்எல்ஏ மறைவு முதல்வர் இரங்கல்