×

ஜூன் 3ல் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை கோ.தளபதி எம்எல்ஏ அறிவிப்பு

 

மதுரை, மே 29: கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஜூன் 3ம் தேதி சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ அறிவித்துள்ளார். மதுரை மாநகர் மாவட்ட திமுகவினருக்கு மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ வேண்டுகோள் அறிவிப்பு வருமாறு: முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.

அன்று காலை 8 மணிக்கு சிம்மக்கல் ரவுண்டானா வடக்கு வெளி வீதியில் அமைந்துள்ள தலைவர் கலைஞரின் சிலைக்கு மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படவுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக, வட்ட கழக, ஒன்றிய பேரூர் கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். முன்னதாக 2000 பேருக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இவ்வாறு வேண்டுகோள் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

 

The post ஜூன் 3ல் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை கோ.தளபதி எம்எல்ஏ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ko. ,Thalapathy MLA ,Madurai ,District Secretary ,Ko. Thalapathy ,MLA ,Simmakkal ,Madurai City ,Ko. Thalapathy MLA ,
× RELATED நியூயார்க் பல்கலை மதிப்புறு முனைவர்...