×

ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

 

திண்டுக்கல், மே 29: திண்டுக்கல் அருகே உள்ள பாளையம் ரயில் நிலையத்திற்கும் வெள்ளியணை ரயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தில் அருகே நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரயில்வே எஸ்ஐ கேசவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில், அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து அவர் இறந்தது தெரியவந்தது. மேலும் அவர் அணிந்திருந்த டீ-சர்ட்டில் அகரம் பெயிண்ட் என அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. மேலும் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dindigul Railway Police ,Thandavalam ,Palayam railway station ,Veliyani ,station ,
× RELATED ரூ.4.68 கோடி முறைகேடு விவகாரம்...