×

உதவி இயக்குனர் ஆய்வு மன்னார்குடியில் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

 

மன்னார்குடி, மே 29: மன்னார்குடியில் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலியானார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த மேல துளசேந்திரபுரம் மேலத் தெருவை சேர்ந்தவர் பாக்கியவதி (62). இவர் மதுக்கூர் அடுத்த இளங்காடு கிராமத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து விட்டு நேற்று முன் தினம் மதியம் தனியார் பஸ்ஸில் ஏறி வந்தார். உள்ளிக்கோட்டை பெட்ரோல் நிலையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது அதனை பேருந்து ஓட்டுநர் கவனிக்காமல் பஸ்சை எடுத்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த பாக்கியவதி தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து பரவாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாக்யவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மன்னார் குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விபத்தில் இறந்த பாக்யவதியின் மகள் போதும் செல்வி என்பவர் பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தனியார் பஸ் டிரைவர் கோட்டூர் அடுத்த குலமாணிக்கம் கிரா மத்தை சேர்ந்த சத்தியராஜ் (38) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

 

The post உதவி இயக்குனர் ஆய்வு மன்னார்குடியில் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Mannarkudi ,Bakiwati ,Tulasendrapuram Upper Street ,Thiruvaroor District Mannarkudi ,Madukur ,Assistant Director ,
× RELATED மன்னார்குடி நகர காய்கனி...