×

வாலிபர் மீது போக்சோ வழக்கு

 

நெல்லை,மே 29: நெல்லை அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்குபதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். அம்பை அருகேயுள்ள கோவில்குளம் பகுதியை சேர்ந்தவர் சாலமோன் மகன் சந்திரன்(25). இவர் கடந்த 26ம்தேதியன்று ஒரு 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து தெரியவந்த அச்சிறுமியின் தாய் அம்பை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இது குறித்து இன்ஸ்ெபக்டர் வனிதா போக்சோ வழக்கு பதிவு செய்து சந்திரனை தேடி வருகிறார்.
குரூப்4 தேர்வுக்கு நெல்லையில் மாதிரி தேர்வு நெல்லை, மே 29: டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு நெல்லை மாவட்ட மைய நூலகம் சார்பில் மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4 தேர்வு வருகிற ஜூன் 9ம் தேதி நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் வெற்றி பெற நெல்லை மாவட்ட மைய நூலகம், சதக்கத்துல்லா கல்லூரி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து சதக்கத்துல்லா கல்லூரியில் வருகிற ஜூன் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச மாதிரி ேதர்வு நடத்தப்படுகிறது. இந்த இலவச மாதிரி தேர்வு எழுத விரும்புபவர்கள் 9626252500, 9626253300 ஆகிய அலைபேசி எண்களில் பதிவு செய்து தேர்வில் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post வாலிபர் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Salomon ,Chandran ,Kovilkulam ,Ambai ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்