×

வீடுபுகுந்து திருட முயன்ற வாலிபர் சிக்கினார்

 

கிருஷ்ணகிரி, மே 29: கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவராமன். இவரது மனைவி சசிகலா. இவர் நேற்று முன்தினம் மதியம், வீட்டை பூட்டி விட்டு, அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் மீண்டும் திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்த சசிகலா, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் உள்ள பொருட்களை மர்மநபர் ஒருவர் திருடிக்கொண்டு இருந்தார்.

உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்த சசிகலா, அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்து, அவர்களின் உதவியுடன் வீட்டுக்குசென்று மர்மநபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரித்த போது, அவர் திருப்பத்தூர் புதூர்நாடு அருகேயுள்ள சின்ன வட்டனூரை சேர்ந்த ஜெகதீஷ் (27) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

The post வீடுபுகுந்து திருட முயன்ற வாலிபர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Sivaraman ,Gundharappalli ,Krishnagiri district ,Sasikala ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்ற முதியவர் கைது