×

நடமாடும் நகைக்கடையாக நீதிமன்றத்தில் ரவுடி ஆஜர்

மதுரை : மதுரை மாவட்டம், வரிச்சியூரைச் சேர்ந்தவர் செல்வம் (எ) வரிச்சியூர் செல்வம். பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் கூட்டாளி கொலை வழக்கில் கைதாகி சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளார். இவர் எப்போதுமே பெரிய அளவிலான முருக்கு தங்க செயின், வித்தியாசமான மோதிரம், வண்ண உடைகளை அணிந்து கொண்டே எங்கும் செல்வதை வாடிக்கையாக கொண்டவர். இவர் தன் மீதான வழக்கு விசாரணைக்காக நேற்று மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு சொகுசு காரில் வந்தார்.

அப்போது, கை விரலில் தங்க சிறுத்தை மோதிரமும், கழுத்தில் தங்க பட்டை செயினின் மேல் பகுதியில் சிங்கம், அதன் கீழ் பகுதியில் காளை மாட்டின் தலைப்பகுதியும் மாட்டிக் கொண்டு வித்தியாசமாக வலம் வந்தார். இதுபோதாதென்று சுமார் ஒரு கிலோ எடை கொண்ட 3 முருக்குகளை கொண்ட முரட்டு தங்கச்சங்கிலியும் அணிந்திருந்தார். இதுபோக எப்போதும் அவரின் அடையாளமான கூலிங்கிளாஸ், காதில் தோடு மற்றும் வளையங்கள், கையில் மோதிரம் போக பிரேஸ்லெட் என தகதகக்கும் நகைக்கடையாக வலம் வந்த வரிச்சியூர் செல்வத்தை, வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வாய் பிளந்தவாறு ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

The post நடமாடும் நகைக்கடையாக நீதிமன்றத்தில் ரவுடி ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Madurai ,Selvam ,Varichiyur, Madurai district ,Varichiyur ,
× RELATED புதுக்கோட்டை அருகே என்கவுன்டரில்...