×

கள்ளக்குறிச்சி மாணவி மதி உயிரிழந்த விவகாரம் சிசிடிவி காட்சி, போன் ஆடியோவை ஜூன் 19ல் தாக்கல் செய்ய வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள், தொலைபேசி உரையாடல் பதிவுகளை ஜூன் 19ல் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில், கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ராமலிங்கம் மகள் மதி(17) என்பவர் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 2022 ஜூலை 13ம் தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையொட்டி நடந்த கலவரத்தில் பள்ளி சூறையாடப்பட்டது. இந்த வழக்கு கள்ளக்குறிச்சி தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி தரப்பு வழக்கறிஞர் மோகன் ஆஜராகி வாதாடினர். அப்போது, மாணவி மதி இறந்த நாளில் பள்ளி நிர்வாகத்தினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், தாளாளர் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் பதிவு மற்றும் ஓப்பன் ஆகாத 26 சிசிடிவி கேமரா பதிவுகளை முழுமையாக வழங்க அரசு தரப்பிற்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் சிசிடிவி காட்சிகள் ஓப்பன் ஆகாதது குறித்து வல்லுநர்களை கொண்டு ஆய்வு செய்து அதற்கானவிளக்கத்தை வரும் ஜூன் 19ம் தேதி விசாரணையின்போது தாக்கல் செய்ய அரசு தரப்பிற்கு நீதிபதி ராம் உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 19க்கு ஒத்தி வைத்தார்.

 

The post கள்ளக்குறிச்சி மாணவி மதி உயிரிழந்த விவகாரம் சிசிடிவி காட்சி, போன் ஆடியோவை ஜூன் 19ல் தாக்கல் செய்ய வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Kanyamur Private School ,Kallakurichi District ,Sinnesalum ,Cuddalore District ,Peryanesalur ,Kalalakurichi ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி அருகே போலி மருத்துவர் கைது