- முன்னாள்
- முதல் அமைச்சர்
- Kattam
- ஜெய்ப்பூர்
- காங்கிரஸ் கட்சி
- முதலமைச்சர்
- ராஜஸ்தான்
- காங்கிரஸ்
- அசோக் கேலத்
ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய துரோகிகளை வேறு எப்படி அழைப்பது? என்று ராஜஸ்தான் மாஜி முதல்வர் காட்டமாக கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் அளித்த பேட்டியில், ‘காங்கிரஸ் கட்சியில் ெவளியேறியவர்களை சந்தர்ப்பவாதிகள், செயல்படாத மனிதர்கள், மக்களின் செல்வாக்கை இழந்தவர்கள், துரோகிகள், முதுகில் குத்துபவர்கள் என்று பல பெயர்களால் அவர்களை அழைக்க முடியும். துரோகம் செய்பவர்கள் உண்மையான துரோகிகள் தான்.
அவர்களை வேறு எப்படி அழைக்க முடியும்?. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் (கட்சியில் இருந்து வெளியேறியவர்கள்) ஐந்து ஆண்டுகளாக கூடவே இருந்தனர். கடைசி நேரத்தில் ஓடிவிட்டனர். லோக்சபா தேர்தலுக்கு முன், மகேந்திர ஜீத் சிங் மாளவியா, லால்சந்த் கட்டாரியா, ராஜேந்திர சிங் யாதவ் உள்ளிட்டோர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். கட்சியை விட்டு வெளியேறிய அவர்களில் பலருக்கு அமைச்சர் முதல் பல பதவிகளை வழங்கினேன். கட்சிக்கு துரோகம் இழைத்த இன்னும் சிலர், கட்சிக்குள் இருக்கின்றனர். அவர்கள் காங்கிரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்’ என்றார்.
The post கட்சியில் இருந்து வெளியேறிய துரோகியை வேறு எப்படி அழைப்பது?: காங். மாஜி முதல்வர் காட்டம் appeared first on Dinakaran.