×

அதிமுக ஆட்சியின்போது பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் : 50 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

சென்னை : அதிமுக ஆட்சியின்போது பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது. பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில், கடந்த 2016 முதல் 2020 வரை மோசடியில் ஈடுபட்டு வந்த தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் 50 பேர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களில், இத்திட்டம் மூலம் மொத்தம் ரூ.2 கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். வீடுகள் கட்டி முடிக்கப்படாமல், பணி முடிந்ததாக போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது.

The post அதிமுக ஆட்சியின்போது பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் : 50 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,CHENNAI ,minister ,Tamil Nadu ,
× RELATED இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல...