×

சிவகங்கையில் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் சுவரொட்டி: மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் அண்ணாய் முழுவதும் பா.ஜ.க. மாநில ய் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு சிறந்த இந்துத்துவவாதி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் இந்துத்துவவாதியாக வாழ்ந்தார் என்று அண்ணாமலை கூறியதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்தனர்.

அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவை குறி வைத்து தாக்கி பேசிவருவதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டினர். அண்ணாமலை கருத்துக்கு ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள், உதயக்குமார், ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் அண்ணாய் முழுவதும் பா.ஜ.க. மாநில ய் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

ஜெ. அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர், வேண்டுமென்றே இந்துக்களுக்கு ஆதரவாக காட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். ஜெயலலிதா குறித்து பேசியதற்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுவரொட்டிகளில் வலியுறுத்தியுள்ளனர். அண்ணாமலை உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் வழக்கு தொடரப்படும் என்று அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.

The post சிவகங்கையில் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் சுவரொட்டி: மன்னிப்பு கேட்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Annamalai ,Sivagangai ,Annai ,BJP ,state president ,Former ,Chief Minister ,Tamil ,Nadu ,Jayalalithaa ,Annamalai.… ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம்:...