×

சாவர்க்கர் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஆளுநர் ரவி மலர்தூவி மரியாதை!!

சென்னை : சாவர்க்கர் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஆளுநர் ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள பதிவில், “பாரதத் தாயின் மிகச்சிறந்த மகனான சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதைகள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தமான் செல்லுலார் சிறையிலும், 16 ஆண்டுகள் ரத்னகிரி சிறையிலும் ஆங்கிலேயர்களால் உடலாலும் மனதாலும் சித்திரவதைகளை மிகவும் கொடூரமாக அனுபவித்த அவர் ஒரு உறுதியான சுதந்திர போராட்ட வீரர். எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களை ஊக்கப்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசியவாத தலைவர் அவர். அவரது தியாகங்கள், ஒன்றுபட்ட, வளர்ந்த மற்றும் வலிமையான பாரதத்தை அதன் பாரம்பரிய பெருமிதத்துடன் கட்டியெழுப்ப அனைத்து இந்தியர்களையும் ஊக்குவிக்கும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post சாவர்க்கர் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஆளுநர் ரவி மலர்தூவி மரியாதை!! appeared first on Dinakaran.

Tags : Savarkar ,Governor Ravi ,Chennai ,Bharat ,Vinayak Damodar Savarkar ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...